முற்குறிப்பு :
இப்பதிவானது இஸ்லாமியர் மீது வெறிபிடித்த சில வெறியர்களுக்காகவே எழுதப்படுகிறது. இதை வைத்துக்கொண்டு யார் மீது யார் வெறியா இருக்காங்க என்பதை நடுநிலையோடு சிந்திக்க கூடிய பதிவர்களிடமே முடிவை ஒப்படைக்கிறேன்.இப்பதிவானது வெறியோடிருப்பவர்களுக்காக மட்டும் என்பதால் ஈழபதிவர்கள் என பொதுபடுத்த மனம் வரவில்லை. அப்படியும் எங்கேனும் மனதினை புண்படுத்தியிருந்தால் அதற்கு நானே பொறுப்பேற்று முன்கூட்டியே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் (அனைத்திற்கும் இறைவனிடம் பதில் சொல்லி ஆகவேண்டுமே)
தன்னை தவிர அனைவரும் மூளைசலவை செய்யப்பட்டவர்கள் என கருதிக்கொண்டு சில அறிவாளிகள் திக்கித் திணறி கொண்டிருக்கிறார்கள். இயற்கையின் சக்கரத்தில், காலநிலை மாறலில் ஏற்படும் புவிமாற்றமே தன்னைத்தானே அறிவாளி என கூறி கொள்பவர்கள்களுக்கும் தன்னை தவிர மற்றவர்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் இல்லை என கூறிக்கொள்பவர்களுக்கும் தூண்டு கோலாக அமைந்து விடுகிறது. இப்பதிவானது சில வெறிபிடித்த பதிவர்களின் மிலெச்சத்தனமான வெறிவாத தாக்குதலாலேயே இடப்படுகிறது.
இதற்கு அவர்கள் ஒரு கேள்வியை எழுப்பலாம்.. ஏன் மற்ற மதத்தை பற்றி எழுதுறீங்க எனலாம். மதம் என்பது அவரவர் தனிபட்ட சுதந்திரம் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால்...
சமூகத்தில் பார்க்கும் விஷயங்களை, பிரச்சனைகளை பகிர்வதற்கும் அலசுவதற்கும் "சமுதாயத்தில் ஒருவர்" என்ற அடையாளமே போதுமானது!
நீ இஸ்லாமியன் நீ சொல்ல கூடாது!
நீ கிருஸ்டியன் நீ சொல்ல கூடாது!
நீ இந்து.. நீ சொல்ல கூடாது!
என்ற முட்டாள்தனமான வாதத்தை தூக்கி குப்பையில் போடுங்கள்!
நான் மூட நம்பிக்கைகளை வெறுப்பதால் மட்டுமே சமுதாயத்தில் நடக்கும் மூடநம்பிக்கைகளை பற்றி கதைக்க முடியும். அந்த வகையிலேயே என் கண்முன் நடந்த ஒரு நிகழ்ச்சியை என் பேஸ்புக்கில் பதிந்தேன். இது முதல் முறை அல்ல... என்னை சுற்றி இருக்குறவங்களுக்கு நல்லாவே தெரியும். ஜாதி பற்றிய என் கண்ணோட்டம், குருபூஜை கலவரம், தர்கா வழிபாடு, அறியாமையில் இருக்கும் இஸ்லாமியர்கள் செய்யும் தவறுகள் என அனைத்தும் இதே ப்ளாக்கில் தான் இருக்கு! எங்கும் கால் முளைத்து போய்விடவில்லை...
கடவுள் பக்தி என்பது அவரவர் விருப்பத்தின் பெயரில் வழிபடவேண்டும் என்பதில் இருவேறு கருத்து இல்லை. ஒருவர் ஞாயிறன்று போவேன் என்பார், ஒருவர் 5 வேளை தொழுவேன் என்பார், இன்னொருவர் வெள்ளி கிழமை போவேன் என்பார்... இவையெல்லாம் கடவுளுக்கும் மனிதனுக்குமான விஷயம். அதை விடுத்து இப்போதும் கடவுளின் பெயரை கூறி உடலை வறுத்திக்கொள்வதில், தீ மிதிப்பதில், கையில் தீ சட்டியை ஏந்தி கடவுளிடம் முறையிடுவதை மூட நம்பிக்கையாகவே பார்க்கிறேன். இப்படி பார்ப்பதற்கு நான் ஒன்னும் இந்துவாகவோ, கம்யூனிஸ்ட்டாகவோ அல்லது பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து வந்தவளாகவோ இருக்க வேண்டிய அவசியம் எங்கேயிருந்து வந்தது? இல்லை ஒரு முஸ்லீம்மா இருந்துட்டுட்டா சமூகத்தில் நடக்கும் விஷயங்கள் பற்றிய நல்லது கெட்டதெல்லாம் தெரிஞ்சுக்க கூடாதுன்னு கண்ண மூடிட்டு போக இங்கே என்ன சர்வாதிகார ஆட்சியா நடக்குது?
இதெல்லாம் கேட்டா புர்கா ஏன் போடுறீங்க? அது மூட நம்பிக்கை தானே என்கிறார்கள். ஆடையில் மூடநம்பிக்கை எவ்வாறு வந்தது???
மீண்டும் எதாவது கேட்டால் அரசியல்வாதி பதில் சொல்வது போல் சம்மந்தமே இல்லாமல் முன்பின் ஆராயாமல், ஒரு மணி நேரம் கூட செலவழித்து உண்மை நிலை, வரலாற்று பிண்ணனி, நபியானது எந்த வயதில்? நபியானதற்கு முன் இருந்த அறியாமை காலம் பற்றி, நபியான பின் திருமணத்தில் கொண்டு வந்த சட்டதிட்டங்கள் பற்றி ஆராயாமல் காப்பி பேஸ்ட் செய்து நபி (ஸல்) பற்றி அவதூறு கூறுவார்கள்.
ஏன் இப்படி தனிமனித தாக்குதலையும், மதத்தின் மேல் தாக்குதலையும் நடத்தும் நேரத்தில் தீமிதி, அக்னிசட்டி, வேல்குத்துதல் போன்றவற்றிற்கு தர்க்கரீதியான விஷயங்களை அறிவியல் ரீதியான விஷயங்களை கொண்டு வந்து கொட்டுங்களேன்... அப்ப இதெல்லாம் மனிதனின் நன்மைக்குதான் என்ற பட்சத்தில் நானும் "பண்டைய காலத்தில் கடைபிடிக்கப்பட்ட நவீன மருத்தவ விஷயங்கள்"ன்னு பதிவு போட்டிருப்பேனே..
மதுரன் ரவீந்திரன் பூப்புனித நீராட்டு விழா பற்றி சிறுகதை எழுதிய போது வராத கோபம் ஆமினா எழுதும் போது மட்டும் மதவெறி பிடித்தவளான மாயம் என்னவோ??
நாற்று குழுமத்தில் தேவரடியாள் முறை பற்றி குறிப்பிடும் போது ஆமினாவிற்கு பிடிக்காத மதவெறி வேல்குத்துதல் பற்றி ஸ்டேடஸ் போட்ட போது வந்துவிட்டதோ?
ஜோசியம் பற்றி இஸ்லாத்தின் பார்வை என்ன? என கேட்டபோது அதெல்லாம் சுத்த மூடத்தனம், மூட நம்பிக்கை என குறை சொன்னபோது வராத மதவெறி புதுசா பொறந்து வந்துடுச்சோ? அப்போதெங்கே போனீங்க மதஎதிர்ப்பு வெறியன்
ம.தி.சுதா???? முக்கியமாக தாக்குதல் நடத்தப்பட வேண்டிய அந்த கால ஓட்டத்திற்கான முதல் தாக்குதலை கோட்டை விட்டுட்டு இப்பதான் சகோதரி ஆமினா முகமட்டிடம் இருந்து ஆரம்பிக்கிறீங்களோ?
உங்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்றால் ஒதுங்கிவிடுங்கள். கேள்வி கேட்டு பதில் பெற்று தெளிவு பெற நினைக்கும் என்னை தடுக்க நீங்க யாருங்க? ஒரு விஷயத்தை கண்மூடித்தனமாக அப்படியே ஆதரிக்கவோ எதிர்க்கவோ நான் ஒன்றும் முட்டாள் அல்லவே? இறைவன் கொடுத்த மூளையை அடகுகடையிலும் வைத்துவிடவில்லையே!
இஸ்லாமியர் மீதான வெறியினை நீங்க அவசரப்பட்டு கீழ இறக்கிவிடவேண்டாம். அப்படியே இருங்க. ஆனா இயந்திரன் படத்தில் சிட்டி ரோபோவுக்கு மூளையில் சிப் போட்டது போல் செயல்படவேண்டாம். கூகுள் இருக்கு! கொஞ்ச நேரமாவது ஒதுக்கி தகவல்களை திரட்ட முயலுங்கள்... நடுநிலையை கடைபிடியுங்கள்!
வாழ்த்துகள்
|
|












